ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
மழவங்கரணை கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழவங்கரணை கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமார் 12 ஏக்கர் பரப்புள்ள பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பாதுகாப்புடன், உதவி பொறியாளர் டி.பாபு தலைமையிலான வந்தவாசி பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.