செங்கல்பட்டு: தரக்குறைவாக பேசிய மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்

தரக்குறைவாக பேசிய மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள் - பீகார் இளைஞர்களுக்கு போலீஸ் வலை வீச்சு - செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2022-04-26 05:45 GMT
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா  இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு பேர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். மூன்றாவது மகன் மற்றும் நான்காவது மகன் திருக்கழுக்குன்றம் பகுதியில் தங்கி தந்தையுடன் அடகு கடையில் பணியாற்றி வருகின்றனர். மூன்றாவது மகன் பிண்டு குமார் (44). இவரது மனைவி சுஜாதா வயது 27.  இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மாமியார் பிரேமா மருமகள் சுஜாதாவை ஒருமையில் பேசுவதாகவும், உணவைத் தட்டில் போட்டு தள்ளி விடுவதாகவும், மருமகளை தரக்குறைவாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரேமா  ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் சுஜாதா பிகாரி என்பதால் இவர்களுக்குள் அடிக்கடி கருத்து மோதல்களும் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மாமியார் பிரேமா சடலமாகக் கிடந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்த மகன் ரன்பாத்லால் அதிர்ச்சியடைந்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் மருமகள் சுஜாதா வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.அவரைத் தேடியபோது காலில் காயமடைந்து நொண்டியபடி மருத்தவமனைக்கு சென்று கொண்டிருந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மை தெரியவந்தது. தொடர்ந்து துன்புறுத்தி வந்த மாமியாரை கொலை செய்யத் திட்டமிட்ட சுஜாதா, பீகாரிலிருந்து தனது உறவினர்களான சுமித், தீபன் ஆகியோரை வரவழைத்துள்ளார். இரவில் வீட்டில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மாடியில் படுக்க வைத்த சுஜாதா, உறவினர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.அவர்கள் வீட்டில் தனியாக இருந்த மாமியாரை கத்தியால் கழுத்தில் குத்தி படு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்த ஸ்மித் மற்றும் தீபன் ஆகியோர் வீட்டின் பின்பக்கமாக குதித்து மலையின் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்