மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-25 21:29 GMT
பெரம்பலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கடந்த 1.12.2019-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். புதிய பதவிகளை அனுமதிக்க வேண்டும். வேலைப்பளு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் இணைப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் வட்டங்கள் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மின்வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்