மொபட்டுகளில் மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு
மொபட்டுகளில் மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், கோடாலிகருப்பூர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கொள்ளிடக்கரை வழியாக மொபட்டுகளில் 2 பேர் மணல் மூட்டைகளுடன் வந்தனர். கிராம நிர்வாக அலுவலரை கண்டதும், மொபட்டுகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். மணல் மூட்டைகளோடு மொபட்டுகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கோடாலிகருப்பூர் காலனியைச் சேர்ந்த அருள்(வயது 35) மற்றும் ஒரு 18 வயது சிறுவன் ஆகியோர் மொபட்டுகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், தா.பழூர் ேபாலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.