கிணற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன?

கிணற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-04-25 20:42 GMT
சங்ககிரி:-
சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை 3 மணிக்கு ஆர்.கே.நகரில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அவர் கிணற்றில் மூழ்கியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று முருகேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்