தாரமங்கலம் அரசு பள்ளியில் உறுதிமொழி ஏற்பு
தாரமங்கலம் அரசு பள்ளியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தாரமங்கலம்:"-
தாரமங்கலம் நகராட்சி 9-வது வார்டு அருணாசலம் புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் உமையவள் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக விமலா, துணைத் தலைவராக லட்சுமி உள்பட 20 பேர் கொண்ட மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வார்டு கவுன்சிலர்கள் ஆர்த்தி, ஜெயந்தி ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் கல்வியாளர் மாரி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால், முத்துசாமி, பெரியசாமி, மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.