கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

நெல்லை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-25 19:36 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள தாழையூத்து வாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பழனியம்மாள் (வயது 66). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறி கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது. இதில் மனவேதனையில் இருந்து வந்த பழனியம்மாள் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்