காதலன் வீட்டு முன்பு பெற்றோருடன் இளம்பெண் தர்ணா

திருமணம் செய்ய மறுத்து கொலைமிரட்டல் விடுப்பதாக கூறி திருவிடைமருதூரில் காதலன் வீட்டு முன்பு பெற்றோருடன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2022-04-25 19:29 GMT
திருவிடைமருதூர்:
திருமணம் செய்ய மறுத்து கொலைமிரட்டல் விடுப்பதாக கூறி திருவிடைமருதூரில் காதலன் வீட்டு முன்பு பெற்றோருடன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார். 
காதல்
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கீழப்பட்டக்கால் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் ராதிகா(வயது25). பி.ஏ. பட்டதாரியான இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.   அப்போது அங்கு வேலைபார்த்து வந்த திருவிடைமருதூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாரூக்அலி மகன் முகனத் என்பவரை ராதிகா காதலித்து வந்தார். 
கைது 
இந்தநிலையில் ராதிகா கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தன்னை முகனத்  திருமணம் செய்ய மறுப்பதாகவும், அவரது  நண்பர்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகனத்ைத கைது செய்தனர். ஆனால் சில நாட்களில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். 
தர்ணா
நேற்று மதியம் திருவிடைமருதூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள முகனத் வீட்டின் முன்பு ராதிகா தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராதிகாவிடம் தெரிவித்தனர். பின்னர் ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
விசாரணை 
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் கொடு்த்தார். அதில் முகனத் தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்து நண்பர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார். 
இதேபோல் முகனத் தாயார் மும்தாஜ் பேகம் கொடுத்த புகாரில் ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாக கூறியிருந்தார். அதன்பேரில் திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்