விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அம்மாப்பேட்டையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினர் தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் ரூ.281-ஐ முழுமையாக வழங்க வேண்டும், நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும், வருகைப் பதிவு செய்யும் நேரத்தை காலை 7 மணி என்பதை மாற்றி 9 மணி என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டு அம்மாப்பேட்டை ஒன்றிய ஆணையர் ஆனந்தராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.