தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-04-25 19:14 GMT
தொற்றுநோய் பரவும் அபாயம்
பறக்கை ரோடு 40-வது வார்டு சாலையோரம் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் தற்போது பெய்து வரும் மழையால் மணல்மேடுகள் தோன்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -பி.சிவபிரகாஷ், இசங்கன்விளை.
ஆபத்தான மின்கம்பம்
பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் மீன்சந்தை அருகில் உயர்மின் அழுத்த மின்கம்பம் உள்ளது. இந்த கம்பம் தற்போது மிகவும் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. இந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் சாய்ந்து நிற்கும் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-சதீஷ், பாலப்பள்ளம்.

மேலும் செய்திகள்