அஞ்சல்துறை ஊழியர்கள் யோகா

அஞ்சல்துறை ஊழியர்கள் யோகா

Update: 2022-04-25 18:54 GMT
ராமேசுவரம்
சர்வதேச யோகா தினத்துக்கான ஆயத்த யோகா பயிற்சி நிகழ்ச்சியானது டெல்லியில் உள்ள டல்கோத்ரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தின் மணிமண்டபம் கட்டிடத்தின் முன்பு நேற்று அஞ்சல் துறை சார்பாக யோகா ஆயத்த பயிற்சி நடைபெற்றது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அஞ்சலக ஊழியர்கள், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பவுண்டேசன் பொறுப்பாளர் ஷேக் சலீம், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஏராளமான பொது மக்களும் இந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சூரியநமஸ்காரம், பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பலவிதமான யோகாசனங்களை செய்தனர். இந்த யோகா பயிற்சியை யோகா ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் வழங்கினர். இந்த  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா தலைமையில் அஞ்சல்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்