பி ஏ பி பாசன வாய்க்காலில் ெகாட்டப்படும் கழிவுகள்
பல்லடம் பகுதியில் உள்ள பி.ஏ.பி.பாசன வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்
பல்லடம் பகுதியில் உள்ள பி.ஏ.பி.பாசன வாய்க்காலில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி.வாய்க்காலில் குப்பைகள்
பல்லடம் பகுதி வறட்சியானது. நிலத்தடி நீரும் பல ஆயிரம் அடிகளுக்கு கீழ் சென்று விட்டது. இந்த நிலையில் பி.ஏ.பி.பாசன வாய்க்கால் மூலம் கிடைக்கும் தண்ணீர் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
ஆனால் அதனை உணராமல் பி.ஏ.பி.பாசன வாய்க்கால் செல்லும் வழிகளிலுள்ள பல கிராமங்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகள் அங்ேக சேரும் குப்பைகளை வாய்க்கால் கரைகளில் கொட்டுகின்றனர். மேலும் ஒரு சில பகுதிகளில் குப்பைகளை நேரடியாக வாய்க்காலில் வீசி விட்டு செல்லும் அவலமும் நடைபெறுகிறது. இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் கரையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளும் வாய்க்காலில் சரிந்து விழுகிறது.
அடைப்பு ஏற்படும் அபாயம்
இதனால் பி.ஏ.பி. வாய்க்கால் ஒரு பெரிய குப்பைத்தொட்டியாகவே மாறி வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் வாய்க்கால் கரைகளில் அமர்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்கள் பாட்டில்களை உடைத்து வாய்க்காலுக்குள் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் வாய்க்காலில்தண்ணீர் திறக்கும்போது குப்பைகள் மற்றும் கழிவுகள் தண்ணீரில் கலந்து நோய்த்தொற்று பரப்பும் வகையில் மாறிவிடுகிறது. மேலும் குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் மடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.
இதனால் விவசாயத்துக்கு பயன்படும் தண்ணீர் வீணாக வெளியில் வழிந்தோடும் நிலையும் ஏற்படுகிறது. எனவே பி.ஏ.பி. வாய்க்கால் கரைகளில் குப்பை கொட்டுவதைத் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.