மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

சோளிங்கர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2022-04-25 17:42 GMT
சோளிங்கர்

சோளிங்கரை அடுத்த வீராணத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர்  மோட்டார் சைக்கிளில் சோளிங்கருக்கு சொன்று கொண்டிருந்தார். போடபாறை கல்வெட்டு அருகே வந்தபோது, நிலைதடுமாறி  மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இது குறித்து அவரது அண்ணன் வேலு சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்