ஓசூரில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
ஓசூரில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார், ஜூஜூவாடி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சின்ன எலசகிரியை சேர்ந்த ராமசாமி (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.