கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் கலெக்டர் வழங்கினார்

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் கலெக்டர் வழங்கினார்

Update: 2022-04-25 17:15 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு கலெக்டர் நேரடியாக சென்று 39 பேரிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு தலா ரூ.78 ஆயிரத்து 500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், கடனுதவி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 273 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் இந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்த கலெக்டர் ஸ்ரீதர் அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், தனித்துணை ஆட்சியர்(நிலம்) ராஜவேல், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லிஏஞ்சல், ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்