கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான பள்ளம்
மேலப்பிடாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி:
மேலப்பிடாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் பள்ளம்
வேளாங்கண்ணியில் இருந்து தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளது. இந்த சாலையில் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை சேவுகராயர் கோவில் அருகில் கிழக்கு கடற்கரை சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
கடந்த ஆண்டு இந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் ஒரு வாலிபர் உயிரிழந்தார். இந்த ஆபத்தான பள்ளத்தால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்