ஆரண்யேஸ்வரருக்கு ரூ.2 கோடியில் புதிய கோவில்

சிதம்பரம் அருகே ஆரண்யேஸ்வரருக்கு ரூ.2 கோடியில் புதிய கோவில் அடிக்கல் நாட்டி பணி தொடங்கியது.

Update: 2022-04-25 17:01 GMT
கடலூர், 

சிதம்பரம் அருகே உள்ள கொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் பிரணவமலர் நாயகி உடனுறை கொன்றை ஆரண்யேஸ்வரருக்கு ரூ.2 கோடியில் புதிய கோவில் கட்டப்படுகிறது. இதற்காக திருப்பணி குழு தலைவராக ராம.முத்துக்குமரனார், செயலாளராக ஊராட்சி மன்ற தலைவர் பக்தவச்சலம், சுபாஷ் சுரேஷ், பொருளாளராக ராஜாராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் திருப்பணி குழு தலைவர் ராம.முத்துக்குமரனார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார். பின்னர் கோவில் கட்ட ரூ.35 லட்சம் வழங்கிய பேராசிரியை உமாதேவி கவுரவிக்கப்பட்டார். விழாவில் சோலியமேடு, சிவாலய குருக்கள் ரமேஷ்சர்மா, அய்யப்பன், குமரன், ஞானம், விஷ்வ ஹிந்து பரிஷத் செந்தில்குமார், கும்பகோணம் ஸ்பதியார் கண்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்