அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு அனைத்து துறை அலுவலகங்களும் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் திருப்பத்தூரில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் 7 மாடியில் பிரதான மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டுமானப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது.
அதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவன், உதவி பொறியாளர் நாகராஜன், உதவி மின் பொறியாளர் அருண்காந்தி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.