கோழிக்குஞ்சு, முட்டைகளை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது

தேனி அருகே கோழிக்குஞ்சு, முட்டைகளை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது.

Update: 2022-04-25 16:47 GMT
தேனி:
தேனி அருகே அரண்மனைப்புதூரை சேர்ந்தவர் ராஜேஷ்பாண்டி. இவருடைய விவசாய தோட்டம் அதே ஊரில் உள்ளது. அவர் தனது தோட்டத்தில் உள்ள வீடுகளில் கோழிகள் வளர்த்து வருகிறார். 
இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள், அங்கு கோழி முட்டைகள் வைத்து இருந்த இடத்தில் பாம்பு ஒன்று இருந்ததை பார்த்தனர். அப்போது அந்த பாம்பு அங்கிருந்த முட்டைகளை விழுங்கி கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே இதுகுறித்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணன் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கண்ணன் அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அந்த பாம்பு சுமார் 4 அடி நீளம் கொண்டது. பிடிபட்டவுடன் அந்த பாம்பு விழுங்கிய 5 முட்டைகளையும், ஒரு கோழிக்குஞ்சையும் வெளியே கக்கியது. அப்போது தான் அந்த பாம்பு, கோழிக்குஞ்சுவையும் விழுங்கியது தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பு தேனி வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்