தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

முக்காணியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-25 16:44 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் முக்காணி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பழையகாயல் ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த சேர்மபாண்டி மகன் முத்துப்பாண்டி (வயது 22) என்பதும், அவர் அப்பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்