நாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

வேதாரண்யம் அருகே நாயை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-25 16:36 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது44). இவரது வீட்டின் அருகில் வசித்து வருபவர் அஜித் (23). சிவதாஸ் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் அஜித்தை பார்த்து அடிக்கடி குறைத்ததால் ஆத்திரமடைந்த அவர், சம்பவத்தன்று அந்த நாயை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த நாய்க்கு கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவதாஸ் கொடுத்த புகாரின் போில் வேட்டைக்காரனிப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் தேவசேனாதிபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்