அரசம்பட்டு பள்ளியில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு
அரசம்பட்டு பள்ளியில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் வீரன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரசன்னா பேசும்போது, சாக்கடை, குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர் ஆகியவற்றின் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகிறது. வீடுகளில் தேவையற்ற பொருட்களான டயர்கள், தேங்காய் ஓடுகள், காலி டப்பாக்கள் போன்றவைகளை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே கொசுக்கள் உற்பத்தி ஆகாது என்றார். மேலும் மலேரியா நோயின் அறிகுறிகள், பரிசோதனை, தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பாலமுருகன், சுகாதார செவிலியர் மீரா, ஆசிரியர்கள் சுதா, சித்ரா, பரணி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.