கல்வராயன்மலை மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ 4 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது

கல்வராயன்மலை மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ 4 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது மலைவாழ்மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Update: 2022-04-25 16:30 GMT
கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் பாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட மோட்டாம்பட்டி கிராமத்துக்கும், கூடலூர் கிராமத்துக்கும் இடையே மணிமுக்தாறு செல்வதால் மழைக்காலங்களில் இரு கிராமங்களில் உள்ளவர்களும் ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு சென்று வர முடியாத நிலை உள்ளதால் மணிமுக்தாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் அப்பகுதி மக்கள் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதன் பேரில் மேம்பாலம் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதையடுத்து மோட்டாம்பட்டி-கூடலூர் கிராமங்களுக்கு இடையே உள்ள மணிமுக்தாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. தங்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதை அறிந்து மலைவாழ் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், துணைத்தலைவர் பாஷாபிஜாகிர்உசேன், பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்யாணிகிருஷ்ணன்,  துரைசாமி, குப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் இளங்கோ, பொறியாளர் அருண்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்