போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Update: 2022-04-25 16:24 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் புத்தக தின விழா நடந்தது. விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார். புத்தக தினவிழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர் முத்துக்கனியன் பரிசுகள் வழங்கினார். இதில் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்