மந்திரிசபை விரிவாக்கம் குறித்து மேலிடம் முடிவு செய்யும் - பசவராஜ் பொம்மை

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-25 16:16 GMT
பெங்களூரு:

கர்நாடகத்தில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறாமல் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  மந்திரிசபை விரிவாக்கம் பற்றி நான் எதுவும் சொல்ல இயலாது. மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்களே முடிவு செய்வார்கள். வருகிற 29-ந் தேதி டெல்லி செல்ல உள்ளேன். அங்கு கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். அவர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு மந்திரிசபை விரிவாக்கம் பற்றி உங்களிடம் தெரிவிப்பேன். 

உப்பள்ளி வன்முறை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதுடன், அதில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். பெங்களூரு கே.ஜிஹள்ளி, டி.ஜே.ஹள்ளியை போன்று உப்பள்ளியில் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் சில சக்திகளுக்கு தொடர்பு இருக்கலாம். அதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்