ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி

ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி

Update: 2022-04-25 14:39 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகா கையுன்னி அருகே பைங்ஙால் ஸ்ரீபகவதி-அதிராளன்மார் கோவிலில், கடந்த 16-ந் தேதி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து 22-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு வேண்டுதல் நிகழ்ச்சி ஆகியன நடந்தது. 

பின்னர் 23-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மன் நீராட்டு விழா, 5 மணிக்கு வழிபாடு நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு கோலாட்டம், ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 30-ந் தேதி வரை தினமும் பல்வேறு வழிபாடுகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஆதிவாசி மக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்