நாமக்கல்லில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-25 14:37 GMT
நாமக்கல்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தினசரி ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சி.ஜெயராமன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகர், மாவட்ட தலைவர் எஸ்.ஜெயராமன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பணி தளத்தில் காலை 7 மணிக்கு பதிவு செய்வதை கைவிட்டு காலை 9 மணிக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்