மங்களபுரம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்த தொழிலாளி கைது

மங்களபுரம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்த தொழிலாளி கைது

Update: 2022-04-25 14:15 GMT
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் அருகே உள்ள நாகப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 53). தொழிலாளி. இவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பதாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் செல்வம் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 7 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்