மேக்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெல்லி மருத்துவ குழுவினர் ஆய்வு

மேக்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெல்லி மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-04-25 11:55 GMT
கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் மேக்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வு ெசய்ய டெல்லியில் இருந்து மருத்துவ குழுவைச் சேர்ந்த 2 பேர் வருகை தந்தனர்.

பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து சேவை பிரிவுகளையும், மூலிகை தோட்டத்தையும் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கான அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய ஆரோக்கிய அமைப்பு வளங்கள் மையத்துக்கு அனுப்பப்படும், என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். 

ஆய்வின் போது மேக்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்