ஆட்டோ மீது மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

செஞ்சி அருகே ஆட்டோ மீது மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-04-25 09:26 GMT
செஞ்சி, 

பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார்(வயது 29). இவர் தனது குடும்பத்தினருடன் செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டனர். செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி அருகே சென்னை திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஆட்டோ மீது கார் மோதியது. இதில் அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் நரேஷ்குமார், அவருடன் காரில் வந்த நிஜம்(25), கவிதா(28), ஸ்ரீ கலைவாணி, லட்சுமிகாந்தன்(29), ஜஸ்வந்த்(2), சர்வேஷ் குமார்(3) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்