தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சென்னையில் 2 வாரங்களில் 385 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சென்னையில் 2 வாரங்களில் 385 பேர் கைது.
சென்னை,
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘குட்கா’, ‘மாவா’, ‘ஹான்ஸ்’ உள்ளிட்ட புகையிலை பொருட்களை சென்னையில் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 10-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலான 14 நாட்கள் நடைபெற்ற சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடர்பாக 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 385 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1,067 கிலோ 930 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 91 கிலோ 891 கிராம் மாவா மற்றும் ரூ.3 ஆயிரத்து 70 மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் உள்ள குளிர்பான கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த கடையின் உரிமையாளர் செந்தில்குமார் (வயது 40), வெற்றிவேல் (42) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.