நோன்பு திறப்பு நிகழ்ச்சி

நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-04-24 23:27 GMT
தென்காசி:
செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் முகமது பண்ணையார் தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனர் பாத்திமா முன்னிலை வகித்தார். கம்பீரம் பாலசுப்பிரமணியம், வல்லம் பெனியேல் சர்ச் பங்குத்தந்தை பால் பர்னபாஸ், மாவட்ட ஜமாத்துல் உலமா சபை நிர்வாகக்குழு உறுப்பினர் கமருதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவூது, தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப், பெரியபிள்ளைவலசை பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி, தொழிலதிபர் முருகையா மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வின் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்