திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிரடி பணியிட மாற்றம்
திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றியவர் சுரேஷ்குமார். அவர் அரியலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் துணை சூப்பிரண்டாக அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.