தோமையார் தேவாலய தேர் பவனி

தோமையார் தேவாலய தேர் பவனி நடந்தது.

Update: 2022-04-24 22:44 GMT
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் தோமையார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா பெருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது. இதில் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் உயிர்த்த ஏசு மற்றும் தோமையார் சொரூபங்கள் வைக்கப்பட்டன. பின்னர் தேர் புனிதநீர் தெளித்து மந்திரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆலயம் அருகே இருந்து புறப்பட்ட தேர் ஊரை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. இந்த தேர் பவனியின்போது பலரும் ஆட்டம், பாட்டத்துடன் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்