தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

சேலத்தில் தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது.

Update: 2022-04-24 20:14 GMT
சேலம்:-
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சேலம் அம்மாபேட்டை ஈத்கா பள்ளி வாசல் வளாகத்தில் நேற்று மாலை தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அம்மாபேட்டை மஸ்ஜித் முத்தவல்லி தாஜூதீன் தலைமை தாங்கினார். இதில், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முஸ்லிம்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினர்.
நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ், மாவட்ட துணை செயலாளர் ரகுபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நாசர்கான், ஜாமியா மஜித் பள்ளி வாசல் முத்தவல்லி அன்வர், மாநகர பொருளாளர் ஷெரீப், மண்டலக்குழு தலைவர் தனசேகர் உள்பட கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநகர சிறுபான்மை அணி துணை செயலாளர் அஜ்மல் கான் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்