காலபைரவருக்கு சிறப்பு பூஜை

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-04-24 20:12 GMT
ஆட்டையாம்பட்டி:-
சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலபைரவர் கோவில் வளாகத்தில் உலா சென்றார். இதில் சேலம், உத்தமசோழபுரம், கொண்டலாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

மேலும் செய்திகள்