ஆடு திருடிய 3 பேர் கைது

ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-24 18:50 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவர் தனக்கு சொந்தமான ஆடு ஒன்றை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டியிருந்தார். நேற்று அதிகாலை பார்த்தபோது ஆட்டை காணவில்லை. அதனை மர்மநபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தே.கோபுராபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன்கள் பிரகாஷ்ராஜ்(26), பிரவீன்ராஜ்(21), அன்பழகன் மகன் பூவரசன்(21) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆட்டை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார், ஆடு திருட பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்