தொழிலாளி மீது தாக்குதல்

பெரியபட்டிணத்தில் ெதாழிலாளி மீது தாக்குதல் நடந்தது.

Update: 2022-04-24 18:50 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் முகம்மது ராசித் (வயது 37). இவரும் அதேபகுதியை சேர்ந்த முகம்மது மீராசா (32) என்பவரும் மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகம்மது ராசித் மது அருந்திக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த முகம்மது மீராசா பீர்பாட்டிலை உடைத்து அவரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து முகம்மது மீராசாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்