கார் மோதி கட்டிட தொழிலாளி பலி

கார் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2022-04-24 18:46 GMT
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை சிறுவாச்சூரில் வாங்கி கொண்டு மீண்டும் விளாமுத்தூருக்கு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்