கரூர்,
கரூரில் நேற்று சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் ஹோச்சுமின் தலைமை தாங்கினார். இதில் தையல் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.700 வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரியம் போல தையல் தொழிலாளர் நலவாரியம், வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்க வேண்டும். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ், பி.எப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்ட சமூக பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டத. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.