சுருக்கெழுத்தர்-மத்தியஸ்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சுருக்கெழுத்தர்-மத்தியஸ்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-24 18:44 GMT
அரியலூர், 
அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர் பதவிக்கும், ஆணையத்தில் உருவாக்கப்படவுள்ள நுகர்வோர் சமரச மையத்தில் மத்தியஸ்தர் பதவிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுருக்கெழுத்து பணிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தகுதிகளை பெற்ற ஓய்வுபெற்ற நீதித்துறை ஊழியர்கள் அல்லது அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசில் தற்காலிகமாக சுருக்கெழுத்தராக பணியாற்றிய நபர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். மையத்தில் மத்தியஸ்தர் பணிபுரிய நுகர்வோர் பாதுகாப்பு சமரச மைய நெறிமுறைகள், 2020-ன்படி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமரச பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள், 15 ஆண்டுகள் வக்கீலாக அல்லது வேறு தொழில் சார்ந்த அனுபவம் கொண்டவர்கள் சமரச நிபுணர்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு நுகர்வோர் சமரச மைய நெறிமுறைகளின்படி கவுரவ ஊதியம் வழங்கப்படும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அடுத்த மாதம் (மே) 5-ந்தேதிக்குள் தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்