மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; பஸ் கண்டக்டர் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பஸ் கண்டக்டர் பலியானார்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தூயமங்கள அன்னை ஆலயத்தின் திருவிழாவை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த நிஜந்தன் என்பவரது மோட்டார் சைக்கிள் கார்த்திக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த நிஜந்தனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.