இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சிங்கம்புணரி பெரிய பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-04-24 18:39 GMT
சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி பெரிய பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டார். முன்னதாக ஜமாத் தலைவர் ராஜாமுகமது இப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் பெரியகருப்பனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.அதை தொடர்ந்து சிங்கம்புணரி பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம அருணகிரி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயற்குழு உறுப்பினர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் சிங்கம்புணரி ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர் அணி செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்