கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது
அவினாசி அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவினாசி
அவினாசி அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா
அவினாசி பழைய பஸ் நிலையம் எதிரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமல்ஆரோக்யதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அங்கே சந்தேகப்படும்படி நின்ற 3 பேரை போலீசார் நெருங்கியபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்துபிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது32), அதேபகுதியை சேர்ந்த சரவணன் (25) மற்றும் ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த முருகேசன் (44) என்பதும், முருகேசனிடமிருந்து சுரேஷ், சரவணன் ஆகிய இருவரும் 6 கிலோ கஞ்சாவை ரூ.75 ஆயிரத்திற்கு வாங்கியதும் தெரியவந்தது.
5 பேர் கைது
மேலும் பள்ளிபாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் (38) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி சாந்தி (54) ஆகிய இருவரும் அவினாசி மங்கலம் ரோடு பகுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருப்பது பற்றிய தகவலின்படி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 15 கிலோ கஞ்சா உள்ளிட்ட மொத்தம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.75 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.