வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு
காரியாபட்டி அருகே வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட சித்துமூன்றடைப்பு கிராமத்தில் உள்ள காலனியை சேர்ந்த மேரி என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த பகுதியில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.