அய்யப்ப தர்ம பிரசார சபா பொதுக்குழு கூட்டம்

அய்யப்ப தர்ம பிரசார சபா பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-04-24 18:21 GMT
கரூர்
கரூர், 
கரூரில் அகில பாரதிய அய்யப்ப தர்ம பிரசார சபா மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பின் தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராஜூ, மாவட்ட கவுரவ தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். 
கூட்டத்தில் நலிவடைந்த பள்ளி குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவது, அமைப்பின் சங்க கொடியேற்று விழாவை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் தயானந்தன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்