சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-24 18:17 GMT
கரூர்
குளித்தலை, 
குளித்தலை அருகே உள்ள பெரிய மலையாண்டி பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 33). கூலித் தொழிலாளி. இவர் இரும்பூதிபட்டியில் இருந்து பஞ்சப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாப்பக்காப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த சிக்னல் போர்டில் மோதி உள்ளார். இதில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். 
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் பழனியாண்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் பழனியாண்டி மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்