கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-24 17:44 GMT
மணமேல்குடி:
மணமேல்குடி அருகே திருவாப்பாடியில் ஒரு பழுதடைந்த கட்டிடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் தலைமையில் போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ராமனாதன் (வயது 32), குலாம்மைதீன் (28) ராவுத்தர்கனி (19), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 கிலோ மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்