வடபூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
வடபூண்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே வடபூண்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தியாகதுருகம் ஒன்றியக்கழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், மலையரசன், மடம் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் கொடியரசி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கலந்து கண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை, அவை தலைவர்கள் சாமிதுரை, நூர்முகமது, மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள் அய்யாசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வி. எஸ். மணி, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், நாகராஜ் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.