ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது.

Update: 2022-04-24 17:05 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த சாய்பாபா கோவில் தெருவில் வசிப்பவர் அனுமுத்து (வயது 35). இவர் திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இவரது எதிர்வீட்டில் இளவரசன் என்பவரின் அக்கா வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தார். நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்து அவர் பார்த்தபோது பீரோவில் இருந்த 1 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது.

இதேபோல் ஜவஹர்லால் நேரு நகரை சேர்ந்த சமையல் மாஸ்டர் கிருஷ்ண மூர்த்தி வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு துணிகள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன ஆனால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. மேலும் சாய்பாபா நகர் குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும்  திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்